Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

குறைந்த வட்டி அல்லாத வருமானம்: 39% சரிந்த ஐடிபிஐ வங்கி நிகர லாபம்

குறைந்த வட்டி அல்லாத வருமானம்: 39% சரிந்த ஐடிபிஐ வங்கி நிகர லாபம்

வங்கியின் மூலதனப் போதுமான விகிதம் 25.39 சதவீதத்திலிருந்து 27.10 சதவீதமாக உயர்ந்தது.

பகிரவும் WhatsApp Facebook

வட்டி அல்லாத வருமானம் குறைந்ததால், ஐடிபிஐ வங்கியின் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 39 சதவீதம் சரிந்து ரூ.2,205 கோடியாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கி ரூ.3,627 கோடி லாபம் ஈட்டியிருந்தது. அதில், என்எஸ்டிஎல் பங்கு விற்பனை மூலம் கிடைத்த ஒருமுறை ஆதாயமான ரூ.1,699 கோடியும் அடங்கும். நடப்பு காலாண்டில் மொத்த வருமானம் ரூ.9,594 கோடியிலிருந்து ரூ.9,865 கோடியாக உயர்ந்தது. வட்டி வருமானம் ரூ.7,104 கோடியிலிருந்து ரூ.8,512 கோடியாக அதிகரித்தது. நிகர வட்டி வருமானம் 29 சதவீதம் உயர்ந்து ரூ.4,228 கோடியானது.

எனினும், வட்டி அல்லாத வருமானம் 46 சதவீதம் குறைந்து ரூ.1,353 கோடியாகவும், செயல்பாட்டு லாபம் ரூ.2,893 கோடியாகவும் இருந்தது. மொத்த வாராக்கடன் விகிதம் 2.65 சதவீதத்திலிருந்து 2.12 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.21 சதவீதத்திலிருந்து 0.17 சதவீதமாகவும் குறைந்தது.

வங்கியின் மூலதனப் போதுமான விகிதம் 25.39 சதவீதத்திலிருந்து 27.10 சதவீதமாக உயர்ந்தது. வாராக்கடன்களுக்கான ஒதுக்கீட்டு விகிதம் 99.24 சதவீதத்தில் நீடித்தது.
இதனிடையே, வங்கியின் 60.72 சதவீதப் பங்குகளை கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.53,000 கோடிக்கு விற்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் 30.48 சதவீதப் பங்குகளும், எல்ஐசியின் 30.24 சதவீதப் பங்குகளும் இதில் அடங்கும். இந்தப் பரிவர்த்தனை நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
பலுசிஸ்தானில் நிலநடுக்கம்: 5.7 ரிக்டர் பதிவு
அடுத்த செய்தி
கை கொடுத்த தனியார் வங்கி பங்குகள்: இரண்டாவது வாரமாக உயர்ந்த பேங்க் நிஃப்டி

தொடர்புடைய செய்திகள்